தனது ரசிகர் மன்றத்தை அஜீத் ஏன் கலைத்தார் என்பது குறித்து பவ்வேறு தகவல்கள் பரவிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த கலைப்பு விஷயத்தில் அஜீத் அதிக அக்கறை காட்டியதே விஜய் ரசிகர் மன்றம் உடைக்கப்பட்ட அதிர்ச்சியால்தானாம்.
விஜய் மக்கள் இயக்க தலைவர் ஜெயசீலன் திடீரென்று திமுக வில் இணைந்ததை எதிர்பார்க்கவே இல்லை விஜய்யும் அவரது அப்பாவும். அதுமட்டுமல்ல, இப்படி வெளியேறிய அவர் விஜய் குடும்பத்தின் மீது சொன்ன புகார்கள் அத்தனையும் பகீர் ரகம்.
தனது ரசிகர் மன்றத்தையும் வளர விட்டால் நாளைக்கு அரசியல் சிக்கல் வரும் என்று நினைத்த அஜீத், இந்த சம்பவத்திற்கு பிறகுதான் வேண்டாம் என்று முடிவெடுத்தாராம். அவர் நினைத்ததுதான் நடந்திருக்கிறது. அஜீத் ரசிகர் மன்றத்தின் சில மாவட்ட தலைவர்கள் பிரபல கட்சிகளில் சேர விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
நீங்கள் அஜீத்துடன் இணக்கமாக இருப்பதால்தான் உங்களுக்கு மரியாதை. அவரே உங்களை விலக்கிய பிறகு நீங்கள் செல்லாக் காசுதான். உங்களை எதற்கு கட்சியில் சேர்த்து பெரிய பதவிகள் தர வேண்டும் என்கிறார்களாம் சம்பந்தப்பட்ட கட்சிகளில். தெரிந்தேதான் கலைத்திருக்கிறார் அஜீத்.