என்ன செய்தேன் நான் உனக்காக
ஏன் இத்துனை பிரியம் எனக்காக
வார்த்தைகள் தேடுகிறேன்
உன் அன்பை விவரிக்க
தென்றலை நாடுகிறேன்
என்ன சுவாசம் புதுபிக்க
தேடலின் முடிவில்
உன் கண்களின் ஒளி அறியேன் நான்
உன் கண்ணீர் அறிவேன்
உன் புன்னகை உதிர கண்டதில்லை நான்
உன் மகிழ்ச்சி உணர்ந்திருக்கிறேன்
கண்டதில்லை நான் நேரில் உன்னை
உன் குரலால் தீண்டுகிறாய் தினமும் என்னை
எப்படி இருக்கீங்க
என்று தொடங்கிய உரையாடல்
இப்படி மாறிப்போனது
டேய் சொல்லுடா என்று
நினைத்துப் பார்த்து
எனக்குள் சிரித்துக்கொள்கிறேன்
நிலைத்து நீடிக்க
இறைவனை வேண்டிக்கொள்கிறேன் – நம் நட்பிற்காக!